"வரைவு பாடத்திட்டம்- தமிழ்நாடு 2017" என்கிற தலைப்பில் 1 முதல் 12 வகுப்பு வரையில் வரைவு பாடத்திட்டத்தை தமிழக கல்வித்துறை TNSCERT.COM இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
இதில் முன்னுரையில் மொழிவழி கல்வி பற்றி குறிப்பிடுகையில் இரண்டு வகையான மொழிகளை வலியுறுத்துகிறது அதில் ஒன்று தாய்மொழி, மற்றொன்று ஆங்கிலம் என்பதை தெளிவாகவே கூறுகிறது. அதோடு மட்டும் நில்லாமல் தாய்மொழி வழியாக கல்வி கற்பதற்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றே கூறுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை தாய் மொழியில் கல்வி கற்பித்தலும், அதில் கற்ற திறனை உலக தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் வெளிப்படுத்த ஏதுவாக ஆங்கிலத்தை கற்கும் கல்வி முறையே இருந்து வந்துள்ளது.
தனியார் பள்ளிகளின் இலாப நோக்கத்துக்காக தாய்மொழி கல்வி மாற்றப்பட்டு ஆங்கில மொழி வழியாக கல்வி கற்பதை மேட்டினமையாக்கி பெற்றோர்களை ஆங்கில வழி கல்விக்கு அடிமைப்படுத்தியது.
இந்த அவலங்களுக்கு இடையில் மத்தியிலே பதவியில் அமர்ந்த பிஜேபி அரசு இந்தி திணிப்பை கையெலெடுத்தது. மத்திய அரசினால் நடத்துகின்ற பள்ளிகளில்லாமல், மாநில அரசு நடத்துகின்ற பள்ளிகளிலும் இந்தி மொழி கற்பிக்கவேண்டும் என்று வற்புறுத்திவருகிறது.
கல்வியாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழக அரசு வரைவு திட்டத்தையும், அதற்க்கான முன்னுரையும் வெளியிட்டுள்ளது நம்பிக்கை தருவதாக உள்ளது. இதை அரசு எப்படி செயல்படுத்தபோகிறது என்பதில்தான் "தாய்மொழி" கல்விக்கான வெற்றி உள்ளது.
அன்புடன்
பா செ சிராஜுத்தீன்